அம்மா உணவகமே சாட்சி: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

அம்மா உணவகமே சாட்சி: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதில்!

அம்மா உணவகமே சாட்சி: சட்டப்பேரவையில் ஸ்டாலின் பதில்!

சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக உறுப்பினரும் உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகத் தெரிவித்து உரையாற்றினார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை வைத்தார். ஆனால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்றார்.

அண்ணாமலை பல்கலைகழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கும், உயர் கல்வித்துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்தவர். ஜெயலலிதாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத்தான் விழுப்புரத்தில் அவர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆளுநரும் அதற்கு அனுமதி வழங்கினார். பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். சிண்டிகேட் உறுப்பினரும் நியமிக்கப்பட்டார்.

ஆனால், புதிய திமுக அரசில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடராது, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்கின்றனர். இதற்கு நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். ஜெயலலிதாவின் பெயர் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே அவர்கள் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்திருக்கிறார்கள்” என்றார்.

இதனிடையே சட்டப்பேரவையில் இதுகுறித்து பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அம்மா உணவகம் செயல்படுவதே இதற்கு உதாரணம்” என்றார் சுருக்கமாக.

No comments:

Post a Comment

Post Top Ad