அண்ணாமலைக்கு ஆசை காட்டி தண்ணி காட்டிய மதன்
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த மாதம் முழுவதும் ஆடியோ ரிலீஸ்கள் அனல் கிளப்பின. இப்போது வீடியோக்கள் வெளியாகி புயலைக்கிளப்பி வருகின்றன.
பாஜக முன்னாள் பொதுச்செயலாளர் கேடி ராகவன் பாஜக பெண் நிர்வாகி ஒருவருக்கு ஆன்லைன் மூலமாக கொடுத்த பாலியல் கொடுமை யை வீடியோவாக வெளியிட்டார்
மதன் ரவிச்சந்திரன். வெளியிட்ட அன்று இந்த வீடியோ பாஜக தலைவர் அண்ணாமலையின் சம்மதத்தோடு வெளியாவதாகவும் அவர் போல் ஒரு தலைவரை பார்க்க முடியாது என்றும் சர்டிஃபிகேட் கொடுத்தார் மதன்.
90ஸ் கிட்ஸ் அவர்.
அதனால் அவர் தனித்துவமாக செயல்படுகிறார் என பாராட்டு பத்திரம் வாசித்தார் மதன். ஆனால் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதும் மதன் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அவரது யூ டியூப் பக்கம் முடக்கப்பட்டது. தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் அண்ணாமலை ஒதுங்கிக்கொண்டார்.
உடனே மதன் அண்ணாமலை மீது பாயத் தொடங்கியுள்ளார். இவர் போல் தலைவர் உண்டா என்று சொன்ன மதன் இன்று வெளியிட்ட வீடியோவில் ஒருமையில் ஏகத்துக்கும் திட்டி தீர்த்துள்ளார். அண்ணாமலையுடன் இது தொடர்பாக இரண்டு மூன்று முறை சந்தித்ததாகவும் அப்போதுள்ள
உரையாடல் எனவும் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ராகவனின் வீடியோவை ராகவன் கொடுத்த நம்பிக்கையினாலே வெளியிட்டதாக மதன் கூறுவதற்கு வலு சேர்க்கும் விதமாக இன்று வெளியாகிய ஆடியோ உள்ளது.
ராகவன் வீடியோவை விட அண்ணாமலையின் ஆடியோ தான் அதிக விவாதத்தை கிளப்பியுள்ளது. கட்சித் தலைவராக இருந்து கொண்டு டபுள் கேம் ஆடிக்கொண்டிருக்கிறாரா என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதன் பின்னணியில் என்ன தான் நடந்துள்ளது என விசாரித்தோம். “கட்சியில் இணைந்து ஓர் ஆண்டுகூட முழுதாக முடியாத நிலையில் அவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பல சீனியர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல கோஷ்டிகள் உள்ள அக்கட்சியில் அண்ணாமலையின் நியமனம் அவருக்கு எதிராக
அத்தனை கோஷ்டிகளையும் திருப்பியுள்ளது. தலைவராக இருந்தாலும் மூத்தவர்களின், அனுபவம் வாய்ந்தவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பதை சில நாள்களிலேயே புரிந்துகொண்டார்.
No comments:
Post a Comment