ராஜினாமா செய்கிறாரா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: டெல்லியில் குஷ்பு முகாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 26, 2021

ராஜினாமா செய்கிறாரா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: டெல்லியில் குஷ்பு முகாம்!

ராஜினாமா செய்கிறாரா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: டெல்லியில் குஷ்பு முகாம்!

தமிழக பாஜக மூத்த தலைவரான கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை மதன் ரவிச்சந்திரன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வீடியோவை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று கூறி தனது கட்சிப் பொறுப்பான பாஜக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார்.

இந்த வீடியோவின் பின்னணியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தன்னை மதன் இரு முறை நேரில் சந்தித்ததாகவும், அப்போது வீடியோவை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் அவர் மறுத்துடன் வீடியோவை வெளியிட்டு விட்டதாக அறிக்கை மூலம் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கட்சி அளவில் குழு அமைத்து அண்ணாமலை உத்தரவிட்டார்.

ஆனால், மதன் வெளியிட்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த ஸ்கிரீன்ஷாட் அவரது அறிக்கைக்கு முரணாக இருந்தது. இது தொடர்பாக “மதனை ஏன் கட்சியில் இருந்து நீக்க வில்லை: அண்ணாமலை ஆடும் ஆடுபுலி ஆட்டம்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மதன் ரவிந்திரனை நீக்கி உத்தரவிட்டார்.

இதனிடையே மதனின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை மதன் வெளியிட்டார். அதில், அண்ணாமலையிடம் வீடியோவை காண்பித்து அவரது ஒப்புதலுடனேயே வீடியோவை வெளியிட்டதாக கூறி, அண்ணாமலையை சந்தித்தபோது, அவருடன் நடைபெற்ற உரையாடலை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். ஆனால், அந்த குரல் பதிவில் இருப்பது அண்ணாமலையா என்பது குறித்து நம்மால் தீர்க்கமாக உறுதி செய்ய முடியவில்லை.

அண்ணாமலையிடம் நடந்த உரையாடல் என்று மதன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் வரும் குரல்பதிவு, “முக்கியமானவர்களிடம் வீடியோவை காட்டி மிக மோசமான நபர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதை புரிய வைப்போம். நாடு, கட்சி, தனி நபர்கள் போன்றவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக இதைச் செய்ய வேண்டும். கட்சியைக்கூட விடுங்கள். ஆனால், நாடு மிக முக்கியம். இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால் உங்கள் பிராண்ட் நிலைக்கும். இதனால், உங்களுக்கு எதிரிகள் உருவாவார்கள். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறது.

வாட்ஸ் அப்பில் மட்டுமல்லாமல் நேரில் பேசும்போதும் “போட்டு விடுங்க” என்றும், கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியதாக மதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வீடியோவை வைத்து அண்ணாமலை தன்னிடம் பேரம் பேசியதாகவும் மதன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad