அமைதியோ அமைதி ... தத்தளிக்கும் தமிழக பாஜக... 14 வீடியோக்களுடன் மதன்...
பாஜகவைச் சேர்ந்த கே. டி. ராகவன் தொடர்பாக வெளியான ஆபாச வீடியோ டெல்லி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜகவில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக
அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தவர் தன் மீதான குற்றசாட்டுகளை மறுப்பதாகக்கூறி கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் மூலம் பாஜகவில் ஒரு செல்வாக்கு நிறைந்த விக்கெட் விழுந்தது. இதனால் இந்த பிரச்சினை முடியவில்லை. பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் அண்ணாமலையுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த ஆடியோவில், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவருடைய அலுவலக அறையை ட்ரான்ஸ்பரண்ட்டாக மாற்றியமைத்துவிட்டதாக கூறியதும், வீடியோவை வெளியிடாவிட்டால் மதன் மற்றும் வெண்பா ஆகியோருக்கு கட்சியில் பெரிய பொறுப்புகளை வழங்குவதாக
பேசுவது அனைத்தும் இடப்பெற்றுள்ளது.
இதனால் கே.டி. ராகவனுக்கு விரித்த வலையில் அண்ணாமலை கச்சிதமாக மாட்டிக்கொண்டதாக நெட்டிசன்கள் கமெண்டிட்டு வருகின்றனர். அத்துடன் சேர்ந்து கட்சியின் மேலிடம் குறித்த தனிப்பட்ட விஷயங்களையும் அண்ணாமலை பகிர்ந்துள்ளது டெல்லி வட்டாரத்தில் யாருக்கும் மகிழ்ச்சியை தரவில்லை.
மேலும், பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக மதன் சுட்டிக்காட்டியிருப்பதால் பரபரப்பு ஓயவில்லை. இந்நிலையில், இந்த
ஆடியோவையும் அண்ணாமலை மறுத்தால் வீடியோவையும் வெளியிட தயார் என்று மதன் திட்டவட்டமாக கூறுவதும், கே.டி. ராகவனை அடுத்து இன்னும் 14 வீடியோக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment