தமிழக அரசு விரைவாக செய்யணும்; அன்புமணி ராமதாஸ் போட்ட சரவெடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

தமிழக அரசு விரைவாக செய்யணும்; அன்புமணி ராமதாஸ் போட்ட சரவெடி!

தமிழக அரசு விரைவாக செய்யணும்; அன்புமணி ராமதாஸ் போட்ட சரவெடி!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் ஏராளமான இளைஞர்கள் பணத்தை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியால் பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையொட்டி கடந்த 2020 நவம்பரில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக ஓர் அவசர தடைச் சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில் தடைச் சட்டம் என்பது பொதுவாக இருக்கக் கூடாது. உரிய விதிமுறைகளுடன் இயற்றப்பட வேண்டும் என்று கூறி தடைச் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது.

திமுக அரசு கொடுத்த நம்பிக்கை

இதனால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மீண்டும் வாடிக்கையாளர்களை கவரும் வேலைகளில் ஈடுபட்டன. இந்நிலையில் விரைவில் உரிய விதிமுறைகளுடன் கூடிய புதியதொரு தடைச் சட்டத்தை திமுக அரசு இயற்றும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த சூழலில் பாமக இளைஞரணித் தலைவர்

அன்புமணி ராமதாஸ் தனத ு ட்விட்டர் பதிவில், விழுப்புரம் மாவட்டம் சேந்தனூரைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாயை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தடை நீக்கம்

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்டதற்கு பிறகு மீண்டும் தற்கொலைகள் தொடங்கியிருப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களின் கேடுகள், அதனால் நிகழ்ந்த தற்கொலைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு பாமக வலியுறுத்தி வந்ததன் பயனாக, கடந்த ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அது செல்லாது என அறிவிக்கப்பட்டது பெரும் பின்னடைவு.

தொடரும் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே ஆன்லைன் சூதாட்டத்திற்கு மக்களை அழைக்கும் விளம்பரங்கள் குவிகின்றன. தடை விலகிய 16 நாட்களில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதிலிருந்து நிலைமையின் தீவிரத்தை உணரலாம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் மக்கள் இரையாகக் கூடாது.

No comments:

Post a Comment

Post Top Ad