வெறிய தீர்க்கவே குழந்தையை அடிச்சேன், கொடூர தாயின் பின்னணியில் தகாத உறவு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 31, 2021

வெறிய தீர்க்கவே குழந்தையை அடிச்சேன், கொடூர தாயின் பின்னணியில் தகாத உறவு..!

வெறிய தீர்க்கவே குழந்தையை அடிச்சேன், கொடூர தாயின் பின்னணியில் தகாத உறவு..!



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மணலபாடி கிராமத்தை அடுத்த மோட்டூரைச்சேர்ந்த பெண் ஒருவர் 2 வயது ஆண் குழந்தையை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் அப் பெண்ணை கைது செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன், இவரது மனைவி துளசி (23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக இவர்கள் சொந்த கிராமமான மோட்டூருக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் தனது 2 வயது குழந்தையை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொடூரமான முறையில் தாக்கி அதை வீடியோ எடுத்து வந்துள்ளார்.

குழந்தையின் உடலில் காயம் எவ்வாறு ஏற்பட்டது என கணவன் கேட்டால் கீழே விழுந்து விட்டான் என மனைவி கூறி வருவது வழக்கமாக இருந்துள்ளது.



இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்ப்பட்டு அதன் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். மனைவி துளசி தனது தாய் வீடான ஆந்திரமாநிலம் சித்தூர் அருகே உள்ள ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று விட்டார்.

இதனிடையே தன் வீட்டில் உள்ள செல்போனில் வீடியோவை பார்த்தபோது வடிவழகன் குழந்தையை கொடூரமான முறையில் தாக்கிய வீடியோ பதிவுவை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஆந்திரமாநிலம் சித்தூர் அருகே உள்ள அவரது வீட்டில் துளசியை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.



வாக்குமூலம்

இதில் சென்னையில் தங்கியிருந்த போது வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவே குழந்தையை தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், 2 வயது குழந்தையை ஏன் தாக்கினாய் என கேட்டதற்கு பெரிய குழந்தை தாயை போல் உள்ளதாகவும்,

சின்ன குழந்தை தந்தையைபோல் உள்ளதாக காதலன் தெரிவித்தாராம் அதனால் ஆத்திரம் அடைந்து கணவனை தாக்குவதாக நினைத்து குழந்தையை தாக்கிய வீடியோ பதிவை சென்னையில் உள்ள காதலுக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.

பின்னர் துளசியை செஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்ற போலீசார் இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார என்பதை அறிய மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு செஞ்சி மருத்துமனை மருத்துவர் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad