அடுத்தகட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

அடுத்தகட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி?

அடுத்தகட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் தற்போது உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து படிப்படியாக குறைந்து 2000 என்ற அளவுக்கு குறைந்தது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் லேசாக பாதிப்பு அதிகரித்தது. இந்நிலையில் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இதனால் அங்கும் பாதிப்புகள் குறைந்தன. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 1688 என்ற அளவில் உள்ளது.


இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் தொடங்குவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரிகள் திறக்கும் தேதியும் அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

திரையரங்குகளை திறக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் முதல் அதற்கும் அனுமதியளிக்க வாய்ப்புகள் உள்ளன.

சுற்றுலாத் தலங்களுக்கான முழு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதியையும் முதல்வர் அளிப்பார் என்கிறார்கள். இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Post Top Ad