விவாகரத்தா?: கோவாவில் சமந்தா, கணவர் சத்தமில்லாமல் செய்த காரியம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

விவாகரத்தா?: கோவாவில் சமந்தா, கணவர் சத்தமில்லாமல் செய்த காரியம்

விவாகரத்தா?: கோவாவில் சமந்தா, கணவர் சத்தமில்லாமல் செய்த காரியம்

சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது.

கோவா தனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும், அங்கு வசிக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா. இந்நிலையில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் அதுவும் கடற்கரைக்கு அருகில் நிலம் வாங்கியிருக்கிறாராம்.

அந்த இடத்தில் பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்ட கணவனும், மனைவியும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

சமந்தா சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனி என்கிற பெயரை நீக்கிவிட்டார். இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரியப் போகிறார்கள். அதனால் தான் அகினேனியை கழற்றிவிட்டுவிட்டார் என்று பேச்சு கிளம்பியது.



விவாகரத்து பேச்சு கிளம்பியிருக்கும் நேரத்தில் கணவருடன் சேர்ந்து இடம் வாங்கியதன் மூலம் தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இருந்து அகினேனியே நீக்கியது குறித்து சமந்தா விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் நிலம் வாங்கியது தான் அதற்கு விளக்கம் என்பது போன்றாகிவிட்டது.

கெரியரை பொறுத்த வரை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad