சீனியர் ஹீரோ படத்தில் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா: காரணம் வெயிட்டு... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

சீனியர் ஹீரோ படத்தில் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா: காரணம் வெயிட்டு...

சீனியர் ஹீரோ படத்தில் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா: காரணம் வெயிட்டு...

மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் மோகன்ராஜா. படங்களை ரீமேக் செய்வதில் வல்லவர் மோகன்ராஜா. அதனால் லூசிபர் ரீமேக் நிச்சயம் அருமையாக வரும் என்பதில் சினிமா ரசிகர்களுக்கு துளி கூட சந்தேகமே இல்லை.

தற்போதைக்கு Chiru153 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

மோகன்ராஜா படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சும்மா சும்மா ஹீரோவை பார்த்து சிரித்து, டூயட் பாடி, காதலிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க நயன்தாரா விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது சிரு153 படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

வெயிட்டான லேடிக்கு ஏற்ற வெயிட்டான கதாபாத்திரம் என்று தான் நயன்தாராவை அணுகியிருக்கிறார் மோகன்ராஜா. முன்னதாக மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா.



அவர் மூன்றாவது முறையாக மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad