சட்டமன்றத்தில் செம சர்ப்ரைஸ் கொடுத்த செங்கோட்டையன்!
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்றைய தினம் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கே.செங்கோட்டையன், காமராஜர் அனைத்து கிராமங்களிலும் பள்ளிகளை தொடங்கினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தார். அவருக்கு பின் வந்த ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு தலைவர்களுக்கும் இங்கே தனித்தனி வரலாறு இருக்கிறது.
இது திராவிட மண்
திராவிடம் என்று சொன்னாலே 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் திராவிட மண் தான் தமிழ்நாட்டில் ஆள முடியுமே தவிர, வேறு எவராலும் ஆள முடியாது என்ற வரலாற்றை படைத்தவர் தந்தை பெரியார். அவர் வழியில் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி நடந்தார்கள். எனவே தான் திராவிட இயக்கம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல திட்டத்தை அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment