சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
தெற்கு பசுபிக் கடலில் ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வானுவாட்டு தீவுக்கு
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு பசுபிக் கடலில் உள்ள சிறிய தீவு வானுவாட்டு. சுமார் 80 தீவுகள் கொண்ட தீவுக் கூட்டமாக உள்ள வானுவாட்டு தீவும் அப்பகுதியில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.
இந்நிலையில் இன்று தெற்கு பசுபிக் கடலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் வானுவாட்டு தீவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment