"தலிபான்களால் இஸ்லாமுக்கு கெட்ட பெயர்" - அஜ்மீர் தர்கா தலைவர் வேதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

"தலிபான்களால் இஸ்லாமுக்கு கெட்ட பெயர்" - அஜ்மீர் தர்கா தலைவர் வேதனை!


 "தலிபான்களால் இஸ்லாமுக்கு கெட்ட பெயர்" - அஜ்மீர் தர்கா தலைவர் வேதனை!

தலிபான்கள் ஷரியத் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமின் நற்பெயரை கெடுத்து வருகின்றனர் என இந்தியாவின் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், அரசுப் படைகளை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி இருக்கின்றனர். ஆப்கனில் ஷரியத் எனும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதே தங்கள் லட்சியமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் போராடி வந்தனர். தற்போது அவர்களின் கையில் அதிகாரம் கிடைத்த பின்னர் பெண்களுக்கான உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்றன.

இந்நிலையில் தலிபான்களை கண்டிக்கும் விதமாக இந்தியாவின் புகழ் பெற்ற ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் தர்காவின் தலைவரான சையது ஜெய்னுல் அபெதின் பேசியதாவது:
தலிபான்களின் பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் உலகில் இஸ்லாமின் மீதான வெறுப்பை ஊக்குவிக்கிறது.

தலிபான்கள் ஷரியத் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளால் இஸ்லாமை அவமதிக்கின்றனர். பெண்கள் மீதான பாகுபாட்டினையும், ஷரியத் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொலைகளையும் ஆதரிக்க முடியாது. இஸ்லாமை பொறுத்தவரையில் இதெல்லாம் குற்றம். தலிபான்களின் பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் உலகில் இஸ்லாமின் மீதான வெறுப்பை ஊக்குவிக்கின்றன

No comments:

Post a Comment

Post Top Ad