எந்தெந்த ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரலாம்? அமைச்சர் சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 30, 2021

எந்தெந்த ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரலாம்? அமைச்சர் சொன்ன தகவல்!

எந்தெந்த ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரலாம்? அமைச்சர் சொன்ன தகவல்!

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் காவல்துறையினர், சுகாதாரத் துறையினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை தொகுதியில் 109 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும்போது பணிக்குத் திரும்பலாம்” எனத் தெரிவித்தார்.

“சென்னையில் உள்ள 122 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்யவேண்டும் என கல்லூரி முதல்வர்களிடம் சுகாதார துறை சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முகாமை தொடங்கி வைத்தபோது பேசிய அவர், “தமிழ்நாட்டில் சுமார் 90% ஆசிரியர்கள் மற்றும் 89% ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் முதல் தவணை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad