ஆப்கன் மக்களை கைவிடக்கூடாது: ஐ.நா., பொதுச் செயலர் வலியுறுத்தல்!
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், ஆட்ச
ி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக சுற்றி வளைத்ததால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், ஐ.நா., பொதுச் செயலாளர் ஆண்டனியோ கட்டரஸ் பேசியதாவது:
ஆப்கன் நிலவரத்தை ஐ.நா., கண்காணித்து வருகிறது. அங்குள்ள ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும் அவர்களை மற்ற நாடுகள் ஏற்றுக் கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆப்கனில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கவலை அளிக்கிறது. இக்கட்டான நிலையில் சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.
No comments:
Post a Comment