தங்கை வச்ச கோரிக்கை: உடனே நிறைவேற்றிய முதல்வர் - மக்கள் ஹேப்பி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 27, 2021

தங்கை வச்ச கோரிக்கை: உடனே நிறைவேற்றிய முதல்வர் - மக்கள் ஹேப்பி!

தங்கை வச்ச கோரிக்கை: உடனே நிறைவேற்றிய முதல்வர் - மக்கள் ஹேப்பி!


தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய மூன்று இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டுவருகிறது. கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி அன்று, தூத்துக்குடி தாப்பாத்தியில் செயல்பட்டு வரும் அகதிகள் முகாமை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டார்.
பல ஆண்டுகளாக இருள் சூழ்ந்திருந்த வாழ்விற்கு விடியலாய் வந்திருக்கிறார் என மக்களவை உறுப்பினர் கனிமொழியை அம்மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

முகாமில் வசிக்கும் தாய்மார்கள் பாசத்தோடு கனிமொழியை அவரவர் வீடுகளுக்கு அழைத்தனர். அவர்களின் அன்பிற்கு இசைந்து ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டார்.

முகாமில் வசிக்கும் 475 குடும்பங்களுக்கும் கொரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை அழைத்து அன்பாக பேசி, 500 ரூபாய் வழங்கி முகம் மலர செய்தார்.

பிறகு அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள், தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள், கூடுதலாகக் குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை அமைத்து தருமாறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கனிமொழி முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.அதனை தொடர்ந்து இன்று இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காகத் தமிழக முதல்வர் இன்று பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்திருக்கிறார்.





No comments:

Post a Comment

Post Top Ad