ஜான் பென்னிகுவிக் மதுரையில் வாழ்ந்தாரா? கலைஞர் நூலகத்துக்கு ஓ.கே. சொன்ன குடும்பத்தினர்!
மதுரையில் ரூ.99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. மதுரையின் பல்வேறு இடங்களில் ஆய்வு
செய்த அமைச்சர்கள், அதிகாரிகள் இறுதியாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
மதுரையில் வாந்தாரா ஜான் பென்னிகுவிக்
ஆனால், அந்த இடத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டடத்தில் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பன்னிகுவிக் வாழ்ந்ததாக கூறி நூலகம் கட்டுவதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும்
தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று விளக்கம் அளித்தார்.
மேலும், ஜான் பென்னிகுவிக் 1911ஆம் ஆண்டில் காலமான பின்னர், 1912ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு, 1913இல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, பென்னிகுவிக் காலமான பின்னர் கட்டிய கட்டடம் என்பதால் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment