"சூரரைப் போற்று" பட பாணியில் மத்திய அரசை விளாசிய முதல்வர் மம்தா பானர்ஜி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

"சூரரைப் போற்று" பட பாணியில் மத்திய அரசை விளாசிய முதல்வர் மம்தா பானர்ஜி!

"சூரரைப் போற்று" பட பாணியில் மத்திய அரசை விளாசிய முதல்வர் மம்தா பானர்ஜி!

பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நாட்டின் சொத்துகளை பிரதமரோ, பா.ஜ.க.வோ சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்து, மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்துகள். இவை பிரதமர் நரேந்திர மோடி அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமானது அல்ல. நாட்டின் சொத்துகளை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துள்ள முடிவுக்கு அனைவரும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இதற்காக பா.ஜ.க., வெட்கப்பட வேண்டும். நாட்டின் சொத்துகளை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டின் சொத்துகளை தனியாருக்கு விடும் திட்டத்திற்கு அண்மையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad