இந்திய மக்களுக்கு குட் நியூஸ்: முடிவுக்கு வருகிறது கொரோனா - விஞ்ஞானி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

இந்திய மக்களுக்கு குட் நியூஸ்: முடிவுக்கு வருகிறது கொரோனா - விஞ்ஞானி தகவல்!

இந்திய மக்களுக்கு குட் நியூஸ்: முடிவுக்கு வருகிறது கொரோனா - விஞ்ஞானி தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வரும் செப்டம்பர் மாதத்தில் தாக்கக் கூடும் என்றும், மேலும், அக்டோபர் மாதத்தில், அதன் தாக்கம் படு தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முடிவுக்கு வரும் நிலையை எட்டியுள்ளது. கடந்த காலங்களை விட அதன் பரவல் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இரண்டாவது அலைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்திய மக்களுக்கு போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் திறன் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு திருப்தி அடையும் என்று நம்புகிறேன். செப்டம்பர் மத்தியில் அது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது தொற்று பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில், தற்போது அப்பகுதியில் பரவல் குறைந்துள்ளது.

தடுப்பூசி குறைவாக போட்ட இடங்களில், வரும் நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம். அடுத்தாண்டின் இறுதிக்குள், இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து பெற்றோர் பயப்படத் தேவையில்லை.

அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். இதுவரை, கொரோனா தொற்றால் குழந்தைகள் மிகக் குறைந்தளவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில், கொரோனாவின் தீவிர அறிகுறி குறைவாகவே இருந்தது. இருந்தும், தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ வசதிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும். ரெம்டெசிவிர், எச்.சி.க்யூ மற்றும் ஐவர்மெக்டின் போன்ற மருந்துகளால் இறப்பு விகிதம் குறைந்ததாக கூற முடியாது. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad