சமீஹா பர்வீன் 'தங்க மகளாக' திரும்பி வரவேண்டும் - அமைச்சர் வாழ்த்து - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

சமீஹா பர்வீன் 'தங்க மகளாக' திரும்பி வரவேண்டும் - அமைச்சர் வாழ்த்து

சமீஹா பர்வீன் 'தங்க மகளாக' திரும்பி வரவேண்டும் - அமைச்சர் வாழ்த்து


தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் சமீஹா பர்வீனுக்கு அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டில் நடைபெறவுள்ள உலக காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் வெற்றி பெற விளையாட்டுத்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அது தொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது,

நான்காவது உலக காது கேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 28 தேதி வரை போலந்து நாட்டில் நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமிதமான செய்தியாகும்.

வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும் கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்று வரும் வீராங்கனை சமீஹா பர்வீன் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம்.லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா பர்வீன் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவரது வெற்றி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞர்களுக்கும் நம்பிக்கையை ஒளியூட்டும்.
தமிழக முதல்வர் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழக விளையாட்டுத்துறைக்கு சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அங்கீகரமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வீர மங்கை சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என்று முதலமைச்சர் சார்பாகவும், தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மக்கள் அனைவரின் சார்பாகவும் மனமார வாழ்த்துகிறேன்.சிங்க மகள்' சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் வென்று 'தங்க மகளாக' திரும்பி வரவேண்டும் என்று தமிழகம் வாழ்த்துகிறது''

என இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad