காந்தியை கொன்றது யார்? -சபையில் வைத்து வானதி மேடத்திடம் கேட்க காங்கிரஸ் எம்எல்ஏ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

காந்தியை கொன்றது யார்? -சபையில் வைத்து வானதி மேடத்திடம் கேட்க காங்கிரஸ் எம்எல்ஏ!

காந்தியை கொன்றது யார்? -சபையில் வைத்து வானதி மேடத்திடம் கேட்க காங்கிரஸ் எம்எல்ஏ!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட் 18) பேசும்போது, "மக்களுக்காக தொண்டாற்றிய ஆர்.எஸ்.எஸ் நபர்கள் பல பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்" எனக் கூறி தமது உரையை தொடங்கினார்.
வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை பதிலடி கொடுக்கும் விதத்தில் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

' இந்த நாட்டில் பலர் பல சிந்தாந்தங்களில் செயல்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது பொத்தாம்பொதுவாக சொல்லக்கூடாது. கல்புர்கி, கவுரிலங்கேஸ்கர் மற்றும் காந்தியை கொன்றது யார் என வானதி சீனிவாசன் விளக்க வேண்டும். அத்துடன் காமராஜரை கொலை செய்ய முயன்றது யார் என்பதை அவர் விளக்க வேண்டும்" என்று செல்வபெருந்தகை வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad