கொடநாடு கொலை: ரணகளத்தில் ஈபிஎஸ்? ஜாலி மூடில் ஓபிஎஸ்... அப்ரூவர் ஆன A2
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி கொடநாடு பகுதியில் 900 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் உள்ளது. இந்நிலையில் கடந்த
2016 இல் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து எஸ்டேட்டின் உரிமை முழுவதும் சசிகலாவுக்கு சென்றது. இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதால் அதிமுகவில் இருந்து சசிகலா கழட்டிவிடப்பட்டார்.
இந்த சூழலில் கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 2 ஆயிரம் கோடி பணம்,
நகை மற்றும் அதிமுக மாஜி அமைச்சர்களின் பல்வேறு சொத்து ஆவணங்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஜெயலலிதா இருந்த காலத்தில் அவ்வளவு எளிதாக யாரும் கொடநாடு எஸ்டேட்டிற்குள் செல்ல முடியாது. ஆனால், அவர் மறைந்த பிறகு ஏற்கனவே இருந்த பாதுகாப்புகள் அங்கு குறைந்து வெறும் காவலாளிகள் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2017 ஏப்ரலில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட
கும்பல் கொடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து பணம், ஆவணங்களை கொள்ளையடிக்க சென்றுள்ளனர். அப்போது காவலாளி ஓம்பகதூர் தடுக்கவே அவர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதாவின் அறைக்கு சென்று பல்வேறு சொத்து மற்றும் இதர ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை நடந்த பிறகு முதல்குற்றவாளியான ஜெவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாளே இரண்டாம் குற்றவாளியான சயான் குடும்பம் சென்ற கார் கேரளாவில் விபத்தாகி மனைவியும் மகளும் இறந்துபோக பலத்த காயங்களுடன் சயான் உயிர் பிழைத்தார்.
No comments:
Post a Comment