ஊரடங்கில் தளர்வு: தமிழகத்தில் அடுத்த வாரத்தில் தியேட்டர்கள் திறப்பு?
தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையின்போது மூடப்பட்ட தியேட்டர்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. முதலில் 50 பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கிய நிலையில்,
கொரோனா இரண்டாவது அலை தீவிரமானது. இதையடுத்து, அமலுக்கு வந்த கட்டுப்பாடுகளின்படி, தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டன.
தற்போது, கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, படப்பிடிப்புக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், தியேட்டர்கள் திறப்புக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில் சில படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும், கொரோனா தொற்று குறைந்து வருவதால், தியேட்டர்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக, தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு ஏற்கனவே கோரிக்கைகளையும் விடுத்துள்ளனர். குறைந்தது 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த
முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, பள்ளிகள் திறக்க உத்தேசம், மருத்துவ கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. அப்போதே தியேட்டர்களை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் திடீரென அதிகரித்த காரணத்தால், அதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகிற 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரங்கு தளர்வு, கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையை கருத்தில் கொண்டே அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
No comments:
Post a Comment