அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திலும் ஊழலா? பரபரப்பு புகார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திலும் ஊழலா? பரபரப்பு புகார்!

அதிமுக ஆட்சியில் இந்தத் திட்டத்திலும் ஊழலா? பரபரப்பு புகார்!

கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மீன்வளம் மற்றும் கால்நடை துறை மீதான மானியக் கோரிக்கையின் போது உடுமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆட்சி காலத்தில் கால்நடை துறையில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு கால்நடை மற்றும் மீன்வளதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்து பேசினார். “கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் கால்நடைகளை பெருக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இதற்காக ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் கறவை மாடுகள் வாங்கப்பட்டன. நேரடியாக பயனாளிகளை அழைத்துச் சென்று மற்ற மாநிலங்களில் கறவை பசுவை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியில் அவ்வாறு செய்யவில்லை. இதன் காரணமாக தரமற்ற கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கடந்த ஆட்சியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் பல்வேறு கால்நடை ஆராய்ச்சி நிலையங்கள் கட்டப்பட்டதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உடுமலை இராதாகிருஷ்ணன் கூறுகிறார். ஆனால் 1979 ஆம் ஆண்டில் கால்நடை ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தும் வகையில் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை மேலும் கால்நடை வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்” என பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad