'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு', சங்கடத்தில் ஓபிஎஸ், அதிமுக வெளிநடப்பு..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு', சங்கடத்தில் ஓபிஎஸ், அதிமுக வெளிநடப்பு..!

'நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு', சங்கடத்தில் ஓபிஎஸ், அதிமுக வெளிநடப்பு..!

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இதுகுறித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.
3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறினார். அதனை தொடர்ந்து, வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்கிறீர்களா? என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம்,'' நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு, இதுதான் என் தற்போதைய நிலைமை என்ற பாடல் வரியை மேற்கோள்காட்டி, இந்த தீர்மானத்திற்கு ஆதரவும் அளிக்கமுடியவில்லை, எதிர்ப்பும் காட்டமுடியவில்லை என்று நடுநிலையாக பதிலளித்தார்.


மேலும், உங்களுடைய விருப்பம் என்ன என்று துரைமுருகன் கேட்டபோது, புதிய வேளாண் சட்டங்களை குறித்து என்னுடைய நிலைப்பாட்டை பற்றி அவையின் முன்னவருக்கு தெரியும் என்று கூறினார். அதற்கு, திமுக உறுப்பினர்களிடையே சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், 3 வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேசியதா? என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த சட்டம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வரும்வரை இதுபற்றி கருத்து சொல்லமுடியாது என்று தெரிவித்துவிட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad