காலேஜுக்கு போகணும்னா இதை செய்யுங்க... மாணவர்களுக்கு அமைச்சர் கண்டிஷன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

காலேஜுக்கு போகணும்னா இதை செய்யுங்க... மாணவர்களுக்கு அமைச்சர் கண்டிஷன்!

காலேஜுக்கு போகணும்னா இதை செய்யுங்க... மாணவர்களுக்கு அமைச்சர் கண்டிஷன்!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க இருக்கும் நிலையில், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, 'தமிழகத்துக்கு இந்த மாதம் 23 லட்சம் தடுப்பூசிகளை மததிய அரசு கூடுதலாக வழங்கி உள்ளது.

சென்னையில் உள்ள 112 அரசு மற்றும் தனியார் கல்லூரியிலும் தடுப்பூசி முகாம் தொடங்க ஏற்பாடுகள் செய்ய இருக்கிறோம். புதன்கிழமை லயோலா கல்லூரியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்க இருக்கிறேன்.

செப்டம்பரில் 18 வயதை நிரம்பிய கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தடுப்பூசி முகாம்களை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 90 % ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது " என்று அமைச்சர் மா.சு. கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ' சென்னையில் 112 அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி உள்ளோம். சுகாதாரத்துறை உதவியோடு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.

செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்போது அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தான் கல்லூரிக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதுமானது" என்று பொன்முடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad