புகழ் பாடிய திமுக எம்எல்ஏ, 'உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்' - ஸ்டாலின் பொளேர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

புகழ் பாடிய திமுக எம்எல்ஏ, 'உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்' - ஸ்டாலின் பொளேர்

புகழ் பாடிய திமுக எம்எல்ஏ, 'உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்' - ஸ்டாலின் பொளேர்

சட்டமன்றத்தில் பேசும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நேரத்தின் அருமை கருதி என்னை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தமது கட்சி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் கடந்த கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தமது தொகுதி பிரச்சனைகளை குறித்து பேசிக்கொண்டிருந்தார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலான பேசியவர் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உறுப்பினர்கள் நேரிடையாக உரைக்கு வர வேண்டும் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். பதிலுரையின் போது அவரவர்கள் தங்களது ஆசான்களுக்கு நன்றி கூறிவிட்டு உரையை தொடங்கிவிட வேண்டும்.

என்னை புகழ்ந்து பேசி நேரத்தின் அருமையை வீணடிக்கக்கூடாது. திரும்ப திரும்ப இதனை சொல்ல மாட்டேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோளை வைக்கிறேன். இதுவே கடைசி என்று கூறியவர் திமுக உறுப்பினர் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad