அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்: அண்ணாமலை விமர்சனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்: அண்ணாமலை விமர்சனம்!

அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம்: அண்ணாமலை விமர்சனம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என, தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனித் தீர்மானத்தை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த அ.தி.மு.க., - பா.ஜ.க.,வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தன்னிச்சையாக ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது கூட்டாச்சி தத்தவத்திற்கு எதிரானது. அதனால் தான் இந்த சட்டங்களை நிராகரிக்க வேண்டியுள்ளது. இந்த மூன்று வேளாண் சட்டங்களும் உழவர்களுக்கு எதிரானது தான்.


இந்த நாட்டில் இருந்து விவசாயிகள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்று தான். நெற்றி வியர்வை சிந்தி உழைக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வேண்டும் என்பது தான் அவர்களது கோரிக்கை. குறைந்தபட்ச ஆதாய விலை என்பது குறைந்த பட்சம் வாய் வார்த்தைக்கு கூட கிடைக்காத சட்டங்கள் தான் இச்சட்டங்கள்” என்றார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என, தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக, தி.மு.க., அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் எவரும் இந்தச் சட்டங்களை எதிர்க்காத போது, உண்மையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது, தமிழக மக்களுக்கு இது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என்று தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad