வனிதாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, August 20, 2021

வனிதாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்

வனிதாவை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்


வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா அனைவருக்கும் தெரிந்த முகம். அம்மாவை போன்றே தைரியமான பெண். அம்மாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பார்.

இந்நிலையில் ஜோவிகாவின் 16வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் வனிதா. தான் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து நடித்து வரும் பிக்கப் படப்பிடிப்பு தளத்தில் தான் மகளின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

கேக் வெட்ட ி அதை மகளுக்கு வாயோடு வாய் வைத்து ஊட்டிவிட்டிருக்கிறார் வனிதா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ஜோவிகா தான் தனக்கு எல்லாமே என்று தெரிவித்துள்ளார்.

மகளுக்கு இப்படித் தான் வாயோடு வாய் வைத்து கேக் ஊட்டுவதா? . பிள்ளைகளையும் கெடுத்திடாதீங்க வனிதா. மகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பழக்கமா இது?. இதன் மூலம் இன்ஃபெக்ஷன் பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

வனிதாவின் ஆதரவாளர்கள் ஜோவிகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் திடீர் என்று பார்த்தால் ஜோவிகா, லக்ஷ்மி மேனன் மாதிரி இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.முன்னதாக கழுத்தில் புது தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் வனிதா. அது பிக்கப் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்பதை விளக்கமாக தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad