திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்


தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும் இந்நாள் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் பேசினார்.
அப்போது அவர், தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு செய்ய தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவு அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டது என கூறினார். தொடர்ந்து பேசியவர், முதலமைச்சர் நல்ல திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அரசு எந்த பணிகளை செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்து வருகிறது. ஒரு அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இ-நூலகம் அமைக்கப்படுகிறது.


இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த சட்டமன்றம் உண்மையில் கண்ணியத்துடன் நடைபெறுகிறது. கல்வி ஒன்றால் மட்டும்தான் பொருளாதாரத்தை உயர்த்தமுடியும். ஆகையால், இந்த அரசுக்கு அதிலே உறுதுணையாக எதிர்க்கட்சி இருக்கும்'' என்று செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad