காலையில் நிகழ்ந்த கொடூரம்: திமுக எம்எல்ஏக்கு இப்படியா பொழுது விடியணும்!
பெங்களூருவின் கோரமங்களாவில் இன்று (ஆகஸ்ட் 31) அதிகாலையில் அதி வேகமாக சென்ற ஆடி கியூ 3 கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
3 பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
கோரமங்களாவில் 80 அடி சாலையில் இந்த விபத்து அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார் நடைமேடையில் ஏறி பஞ்சாப் நேஷ்னல் வங்கி கட்டிடத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானது.
இறந்த ஏழு பேரில் திமுகவின் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷின் மகன் கருணாசாகர் மற்றும் அவரது மனைவி பிந்து ஆகியோர் அடங்குவர்.
இஷிதா, தனுஷ், அக்ஷய், கோயல் மற்றும் ரோஹித் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சிதைந்து போனதை அந்த இடத்திலிருந்து வரும் காட்சிகள் காட்டுகின்றன. கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்
சடலங்கள்
பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு காரணம் கார் அதி வேகமாக இயக்கப்பட்டதே என முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment