இபிஎஸ், ஓபிஎஸ் 'விசாரணைக்கு' ஒத்துழைக்கணும்; கொடநாடு விவகாரத்தில் திருமாவளவன் தில் பேட்டி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 21, 2021

இபிஎஸ், ஓபிஎஸ் 'விசாரணைக்கு' ஒத்துழைக்கணும்; கொடநாடு விவகாரத்தில் திருமாவளவன் தில் பேட்டி!

இபிஎஸ், ஓபிஎஸ் 'விசாரணைக்கு' ஒத்துழைக்கணும்; கொடநாடு விவகாரத்தில் திருமாவளவன் தில் பேட்டி!



கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டியது ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோரின் கடமை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.திருச்சியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திமுக தலைமையிலான அரசு சமூக நீதிக்கான அரசு. பெரியார் கண்ட கனவை அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிற திட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இந்திய வரலாற்றில் இது மாபெரும் சமூக புரட்சி - இந்தியாவிற்கே இது வழிகாட்டும் நிகழ்வு. இதை பலர் எதிர்க்கின்றார்கள். இந்துக்களை தான் நியமிக்கின்றனர். ஆனால் இதற்கு பலர் கூக்குரல் இடுகிறார்கள்.

நீதிமன்றம் செல்வோம் என அச்சுறுத்துகிறார்கள். ஆனால் திமுக தலைவர் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என கூறி உள்ளார். நேற்று 21 கட்சிகளை சேர்ந்தவர்கள் சோனியா காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டோம்.விடுதலை சிறுத்தைகள் சார்பில் பெகாசாஸ் பிரச்சினை குறித்து முன் வைத்தோம். தற்போதைய சூழலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய ஒற்றுமை தான் முக்கியமே தவிர அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய கட்டாயம் இல்லை.

CAA,உபா குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வன்கொடுமைகள் தடுப்பு கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது. ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டிய கூட்டம் கூட்டப்படாமல் தற்போது கூட்டப்பட்டுள்ளது.

சமூக நீதி சமூகங்களை ஒன்றிணைக்க விடாமல் மோடி அரசு தடுக்கிறது. schedule caste என்கிற அடிப்படையில் அணி திரளக்கூடாது என பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.
மக்கள் சமூக நீதி பேரவை என்கிற அமைப்பு திருச்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து வருகிறது. இன்று அவர்கள் எனக்கு விருது வழங்க உள்ளனர். 25 சாதிகளின் பெயர்கள் ஒன்றிய அரசின் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதை நாங்கள் சேர்க்க வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து முதல்வரிடமும் முன் வைத்துள்ளோம். ராமதாஸ் நேரத்திற்கு ஒன்றை பேசுகிறார். அவரது கருத்தில் அவர் நிலையாக நின்றால் சரி.

சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் தொடர்பாக முதல்வரிடத்தில் மனு அளித்துள்ளோம். ஐஐடி வல்லுனர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்களின் அறிக்கைக்கு பின்னர் எல்லாவற்றையும் சரி செய்து தான் அங்கு மக்களை அமர்த்துவார்கள்.ஒப்பந்ததாரர்கள் இது போன்று கட்டிடத்தை அலட்சியத்துடன் கட்டி உள்ளனர். அடிதட்டு மக்கள் என்பதாலே இவ்வளவு மோசமாக கட்டி உள்ளனர். இனி அந்த ஒப்பந்ததாரர்கள் எங்குமே பணி செய்ய கூடாது.
அதே போல் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும் ஏன் பதற வேண்டும்? அவர்களுக்கு எதுவும் தொடர்பு இல்லை என்றால் அச்சப்பட தேவை இல்லை.

இந்த வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தால், அதற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் கடமை. இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மதுரை மண்டல செயலாளர் மதுரை எல்லாளன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்,தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad