நகைக்கடன் தள்ளுபடி தாமதம் ஏன்? ஸ்டாலின் சொன்ன பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 16, 2021

நகைக்கடன் தள்ளுபடி தாமதம் ஏன்? ஸ்டாலின் சொன்ன பதில்!

நகைக்கடன் தள்ளுபடி தாமதம் ஏன்? ஸ்டாலின் சொன்ன பதில்!

நிதி நிலைமையை காரணம் காட்டி திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போய்விடுமோ என எதிர்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினே இதற்கு பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3ஆவது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. 2021 - 2022ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 14ஆம் தேது வேளாண்மை நிதிநிலை அறிக்கையை எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அவற்றின் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர், ஆர்.பி. உதயகுமார் விவாதத்தைத் தொடங்கினார். “நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைப் பார்த்தோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யும் போது, குட்டி பூனையைத் தாய்ப் பூனையைக் கவ்வுவது போல் இருக்கவேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை பூனை எலியைக் கவ்வுவது போல் இருக்கிறது.

எனக்குப் பொருளாதாரம் தெரியாது. ஆனால் மக்களின் பசியும் ஏழ்மையும் பற்றி தெரியும். அதிமுக ஆட்சியில் 715 திட்டங்களில் 537 திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி நிலையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளைக் கைவிட்டு விட வேண்டாம். இனியாவது வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுமா” என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் வாக்குறுதியிலிருந்து நாங்கள் பின் வாங்கியதாகப் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.100 நாட்கள் நிகழ்வுகளை எல்லாம் நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம்.

No comments:

Post a Comment

Post Top Ad