அடேங்கப்பா 112 புதிய அறிவிப்புகள்: உங்க ஊருக்கு என்ன திட்டம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

அடேங்கப்பா 112 புதிய அறிவிப்புகள்: உங்க ஊருக்கு என்ன திட்டம்?

அடேங்கப்பா 112 புதிய அறிவிப்புகள்: உங்க ஊருக்கு என்ன திட்டம்?

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் வெளியிட்ட 112 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 2959 திருக் கோயில்களில் பணிபுரியும் ஆசியர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் இதற்காக ஒரு ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும

திருக்கோயில்களில் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்

திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும்

கடந்த பத்தாண்டுகளாக திருக்கோயில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக ஏனைய இனங்கள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருகி உருகி சொக்கத் தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பங்குகளில் முதலீடு செய்து அதிலிருந்து வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பிற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணி மேற்கொள்ளப்படும்சென்னை உட்பட தமிழகத்தின் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இல் 10 கோடி ரூபாய் செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்படும்

பழனி மற்றும் ஸ்ரீரங்கம் திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திருத்தணிகை , சமயபுரம் திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.அர்ச்சகர் ஒருவர் பிரபந்த விண்ணப்ப வேத பாராயணம் மற்றும் இசை கற்போர் ஆகியோருக்கு பயிற்சி காலத்தில் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது தற்போது இந்த ஊக்கத்தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது அதற்கான கட்டணத்தை திருக் கோயில் நிர்வாகமே செலுத்தும்

மண மக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாமல் பராமரிப்பது குறித்து வழிமுறைகளை கொண்ட கையேடு வெளியிடப்படும்.

திருத்தணிகை திருச்செங்கோடு திருச்சி மலைக்கோட்டை திருநீர்மலை திருக்கழுக்குன்றம் ஆகிய ஐந்து மலை திருக்கோயில்களுக்கு கம்பி வட ஊர்தி வசதி செய்திட சாத்தியக்கூறுகள் அறிவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்

திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் தற்காலிகமாக பணி புரியும் 1500 பகுதியான பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் 25 கோடி ரூபாய் செலவிடப்படும்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் மேலும் 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணியாற்றிவரும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் அதன் மூலம் 496 ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பயனடைவார்கள்

திங்கள்தோறும் திருக்கோயில்களில் தூய்மை பணி திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் அனைத்து இடங்களிலும் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்படும்

சென்னை பழனி திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் ரூபாய் 5 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்


திருக்கோயில்கள் சார்பாக பக்தர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 திருமண மண்டபங்கள் ரூபாய் 53 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad