மெரினா கடற்கரைக்கு வருகிறது படகு சவாரி - அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

மெரினா கடற்கரைக்கு வருகிறது படகு சவாரி - அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!

மெரினா கடற்கரைக்கு வருகிறது படகு சவாரி - அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி அமைக்கப்படும் என, தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இன்று, இந்து சமய அறநிலையத் துறை, விளையாட்டு மற்றும் கலை, பண்பாட்டு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதலில் இந்து சமய அறநிலையத் துறை, கலை பண்பாட்டு துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. பின்னர், விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.

அதில், சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும். ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். ஜவ்வாது மலைப் பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Top Ad