தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 28, 2021

தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

பண்டிகை காலங்கள் வர உள்ளதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அவசர கடிதம் எழுதி உள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அளித்துள்ளன. இந்தியாவில் பல மாதங்களுக்கு பிறகு இன்று தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 795 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் வர உள்ளன. இந்நிலையில் இன்று, அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நிர்வாகிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்த வேண்டும். அதே போல், பண்டிகை காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணித்து செயல்படுத்த வேண்டும். திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால் கட்டுப்பாடுகள் அவசியம்.

மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.


இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை, வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், அண்மையில், ஓணம் பண்டிகையை ஒட்டி, அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அளித்ததால், அங்கு கொரோனா தொற்று பரவல் கோரத் தாண்டவமாடியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad