கூர்மையான இடதுதிசை: காங்கிரஸில் இணைந்த கண்ணையா குமார்; ஆதரவளித்த ஜிக்னேஷ் மேவானி!
ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக இருந்த கண்ணையா குமார், கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதி அஃசல் குருவின் நினைவு நாளன்று தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக சிறை தண்டனை பெற்றவர்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த கண்ணையா குமார், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் பீகார் மாநிலம் பெகுசாராயில், பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலிவத்கம் தொகுதியில் ல் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. சமூக ஆர்வலரான இவர், ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்
பாஜகவின் சித்தாந்தத்துக்கு நேரெதிர் புள்ளியில் நிற்கும், கண்ணையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கடந்த சில தினங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், கண்ணையா குமார் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார். அதேசமயம் அக்கட்சிக்கு ஆதரவளிப்பதாக ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், “சில காரணங்களால் என்னால் காங்கிர்ஸ் கட்சியில் முறைப்படி சேர முடியவில்லை. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருக்கும் நான், ஒரு கட்சியில் சேர்ந்தால் எம்.எல்.ஏ.வாக தொடர முடியாது. சித்தாந்த ரீதியாக காங்கிரஸின் ஒரு பகுதியாக இருக்கிறேன். வரவிருக்கும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment