14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

இன்று (செப்டம்பர் 24 )மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.


இன்று முதல் செப்டம்பர் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டாச்சியர் அலுவலகம் 18, ஏத்தாப்பூர் (சேலம்) 11, சங்கரிதுர்க் (சேலம்), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 9, செட்டிகுளம் (பெரம்பலூர்), நாவலூர் கொட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி) 8, அரவக்குறிச்சி (கரூர் , திருப்பூர் தலா 7, கள்ளிக்குடி (மதுரை), ஆத்தூர் (சேலம் தலா 6, திருப்பத்தூர் (சிவகங்கை, காரியாபட்டி (விருதுநகர்), பாரூர் (கிருஷ்ணகிரி , ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை தலா 5, கூடலூர் பஜார் (நீலகிரி, வலங்கைமான் (திருவாரூர், எருமைப்பட்டி (நாமக்கல்), பொன்னமராவதி (புதுக்கோட்டை) தலா 4, பாடாலூர் (பெரம்பலூர்), திருப்பத்தூர் கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), தூத்துக்குடி தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக் கடல் பகுதிகள்

இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.

செப்டம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

Post Top Ad