2024இல் இது மட்டும் நடக்கக்கூடாது: அப்புறம் தேர்தலே இருக்காது - திருமாவளவன்
திரிபுராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்க சென்ற முன்னாள் முதல்வர் மாணிக் சர்காரை தடுத்து நிறுத்தி கலவரம் செய்த பாஜகவினரை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், காங்கி்ரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில
செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய முத்தரசன், “பாஜக தனது வன்முறை வெறியாட்டத்தை திரிபுராவில் தொடங்கியுள்ளது, திரிபுரா மட்டுமல்ல நாடு முழுவதும் தொடருவார்கள். வன்முறை தான் தீர்வு என்றால் அவர்களை விட அதிகமாக எங்களுக்கு வன்முறை செய்யத்தெரியும், ஆனால் நாங்கள் அதனை விரும்பவில்லை” என்று கூறினார்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “திரிபுரவில் ஆடசி அமைத்த பிறகு யாருக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை, பின்வாசல் வழியாக சென்று பழங்குடியின மக்களை ஏமாற்றி உள்ளனர். வன்முறையை பாஜக நேசிக்கிறார்க்ள், அதை மக்கள் அறிந்து கேட்க்கும் போது அவர்களை வன்முறைக்கு ஆளாக்கி சாலையில் தள்ளப்பட்டனர். இந்தியாவில்
தமிழ்நாடுதான் முன்னணியாக பாஜகாவின் போலி பிம்பத்தை அறிந்து மதசார்பற்றவர்கள் இணைந்து பாஜகவை விரட்டி அடித்த வரலாறு உள்ளது” என்று பேசினார்.
திராவிடர் கழக்த் தலைவர் கி.வீரமணி, “கொரோனவை விட கொடுமையானவர்கள் மதவாதிகள். இலட்சியங்களால் கட்டப்பட்டுள்ள அணி இது. யாரும் அசைத்து பார்க்க முடியாது. மிருகங்களை எப்படி பழக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் இந்த மேடையில் உள்ளவர்கள். இந்துத்துவத்தை இராணுவ மயமாக்கு, ராணுவத்தை இந்து மயமாக்கு. இது தான் அவர்களின் நோக்கம். அது தமிழகத்தில் எடுபடாது. இது பெரியார் மண். பெரியார் மண்ணில் உங்கள் வித்தைகள் நடக்காது. வன்முறையை தவிர்த்து எல்லா மக்களை ஒன்றுபடுத்துவோம்” என்று கூறினார்.
No comments:
Post a Comment