23க்கு 43 உடன் காதல், ஒரே மகளின் திருமண போட்டோவை பார்த்து உயிரை விட்ட பெற்றோர்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

23க்கு 43 உடன் காதல், ஒரே மகளின் திருமண போட்டோவை பார்த்து உயிரை விட்ட பெற்றோர்..!

23க்கு 43 உடன் காதல், ஒரே மகளின் திருமண போட்டோவை பார்த்து உயிரை விட்ட பெற்றோர்..!

திருப்பூர் மாவட்டம் அவினியாசியை அடுத்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65). இவரது மனைவி சுமதி (55). இந்த தம்பதிக்கு ஜனனி (23) என்ற ஒரே மகள் உள்ளார். ஜனனி கோவையில் பிசியோதெரபி மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில், ஜனனி அவரது வீட்டருகே சிக்கன் கடை நடத்தி வரும் சம்பத் என்ற 41 வயதான நபரை காதலித்து வந்துள்ளார்.
சம்பத்துடன் அடிக்கடி போன் பேசியும் மெசேஜ் செய்தும் வந்த ஜனனியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த வயதான பெற்றோருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், ஒரே மகள் வயதான நபரை காதலித்து வருவதை அறிந்ததும் அவர்களது நெஞ்சில் பேரிடியை கொடுத்தது. இந்நிலையில் ஜனனிக்கு புத்தி சொன்ன பெற்றோர், படிப்பு முடிந்ததும் வேறொரு நல்ல பையனை பார்த்து திருமண செய்து வைக்கிறோம் என்று அறிவுரை வழங்கினர்.

இதற்கிடையில் ஊரடங்கு போட்டு கல்லூரி மூடப்பட்டதால் வீட்டிலேயே முடங்கிய ஜனனி காதலனை சந்திக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். தற்போது மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து கல்லூரிக்கு சென்று வந்த ஜனனி கடந்த சனிக்கிழமை அன்று சம்பத்தை திருமணமும் செய்துவிட்டார். மேலும் அன்று மாலை தனது தந்தையின் வாட்சப் எண்ணிற்கு, சம்பத்துடன் மண கோலத்தில் இருக்கும் புகிடைப்படத்தியும் ஜனனி அனுப்பியுள்ளார்.

அதை பார்த்தவுடனே கதிகலங்கி போன பெற்றோர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். அதன்படி, தென்னை மரத்துக்கு பயன்படுத்தி வந்த விஷம் வாய்ந்த திம்மட் மாத்திரையை வாழைப்பழத்துடன் இணைந்து சாப்பிட்டு மயங்கியுள்ளனர். மறுநாள் காலை வரை பொன்னுசாமியின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, கணவன், மனைவி இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.

உடனே அவர்கள் குன்னத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது சடலத்தையும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதி இருவரும் முதலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததும், கயிறு எட்டாததால் திம்மட் மாத்திரையை சாப்பிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad