மும்பை ஸ்டைலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பலே திட்டம்: சிறைக்கு சென்ற பட்டதாரி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

மும்பை ஸ்டைலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பலே திட்டம்: சிறைக்கு சென்ற பட்டதாரி

மும்பை ஸ்டைலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பலே திட்டம்: சிறைக்கு சென்ற பட்டதாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது திருநறுங்குன்றம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்ற விவசாயிக்கு குன்னத்தூர் கிராமத்தில் நிலம் உள்ளது. அதில் மின் மோட்டாருடன் கூடிய கிணறும் உள்ளது. இந்தநிலையில், வருகின்ற 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் மும்பையில் கொண்டாடுவதுபோல் குன்னத்தூர் கிராமத்தில் வெகுவிமரிசையாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்
ராஜ்குமார் அவரது நண்பர் காளிமுத்து மற்றும் சிறுவர்கள் இருவர் என நான்கு பேர் சேர்ந்து முடிவு செய்தனர்.
மேலும், விழாவை சிறப்பாக நடத்துவதற்கு போதிய பணத்தை தயார் செய்யும் நினைத்தனர். இதனிடையே அந்த கிராமத்தில் உள்ள இரண்டு விவசாயக் கிணறுகளுக்கு அடிக்கடி அவர்கள் குளிக்கச் செல்லும்போது அந்தக் கிணறுகளில் விவசாய மின்மோட்டார் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு மின் மோட்டார்களை இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து உடைத்து எடுத்து அதை உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் விற்பதற்காக ஒரு மினி டெம்போவில் கொண்டு வந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது விவசாய மின் மோட்டாரை திருடி வந்த வாகனத்தை மறித்து விசாரித்த போது இவர்கள் நான்கு பேரும் முன்னுக்குப்பின் முரணாக கூறியதைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad