போலீஸ் செஞ்ச வேலைய பாருங்க..! - காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

போலீஸ் செஞ்ச வேலைய பாருங்க..! - காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

போலீஸ் செஞ்ச வேலைய பாருங்க..! - காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

ஆந்திர பிரதேச மாநிலத்தில், பணி செய்து கொண்டிருந்த காவல் நிலையத்திலேயே, 16 லட்சம் ரூபாய் திருடிய காவலரை, சென்னையில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்வித் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஜனார்தன் நாயுடு என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் காரணமாக வைக்கப்பட்ட 16 லட்சம் ரூபாயை திருடி உள்ளார். இதை அடுத்து அவர் உரி காரணங்களின்றி விடுப்பில் சென்றுள்ளார். ஆனால் இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியே தெரிய வந்திருக்கிறது.

பணத்தை எடுத்துக் கொண்டு, விடுமுறையில் சென்ற காவலர் ஜனார்தன் நாயுடுவை, செல் போனில் தொடர்பு கொண்ட காவல் துறையினருக்கு செல் போன் சில நாட்களாக அணைத்து வைக்கப்பட்டது தெரிந்ததும் தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஜனார்தன் நாயுடுவை, ஆந்திர மாநில தனிப்படை போலீசார் இன்று சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து, 14 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டிற்கான காரணத்தை விசாரித்த போது சில நாட்களாகவே ஜனார்தன் நாயுடு குடும்ப பிரச்னைகளால் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad