டாக்டரை 2வது திருமணம் செய்த அஜித், சிவாவின் 'தம்பி' - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

டாக்டரை 2வது திருமணம் செய்த அஜித், சிவாவின் 'தம்பி'

டாக்டரை 2வது திருமணம் செய்த அஜித், சிவாவின் 'தம்பி'

2003ம் ஆண்டு வெளியான அன்பு படம் மூலம் நடிகரானவர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி. வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.பாலா தற்போது மலையாள படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பாலாவுக்கும், டாக்டர் எலிசபெத்துக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு இன்று நடைபெற்றது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக தனது மனைவியை அறிமுகம் செய்து வைத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் பாலா. அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது பாலாவுக்கு இரண்டாவது திருமணம் ஆகும்.

முன்னதாக அவர் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அவந்திகா என்கிற மகள் இருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad