காதலரை கழற்றிவிட்டேனா?: பேசும் படம் வெளியிட்ட ஸ்ருதி
ஸ்ருதி ஹாசன் தன் காதலர் சாந்தனு ஹசாரிகாவை பிரிந்துவிட்டார் என்று பேச்சு கிளம்பிய நிலையில் அவரை ஏஞ்சல் என்று புகழ்ந்திருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் தன் காதலர் சாந்தனு ஹசாரிகாவை பிரிந்துவிட்டார் என்று பேச்சு கிளம்பிய நிலையில் அவரை ஏஞ்சல் என்று
புகழ்ந்திருக்கிறார்.
காதல் முறிவு பேச்சு கிளம்பியது குறித்து ஸ்ருதி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு அவரை ஏஞ்சல் என்று பாராட்டியிருக்கிறார். இதன் மூலம் தான் சாந்தனுவை பிரியவில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
2020ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது, 2020ம் ஆண்டு என்னை புகைப்படம் எடுப்பது உள்பட பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார். முதல் லாக்டவுன் நேரத்தில் ஸ்ருதி மும்பையில் தனியாக சிக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment