நீ என்ன என் பாய் ஃபிரெண்டா?: விஜேவை அதிர வைத்த வனிதா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

நீ என்ன என் பாய் ஃபிரெண்டா?: விஜேவை அதிர வைத்த வனிதா

 நீ என்ன என் பாய் ஃபிரெண்டா?: விஜேவை அதிர வைத்த வனிதா

வனிதா விஜயகுமார் எப்பொழுதுமே டிரெண்டிங்கில் இருக்கிறார். படம் அல்லது தனிப்பட்ட விஷயம் பற்றி அவரை பற்றி சமூக வலைதளவாசிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் பவர் ஸ்டார் சீனிவாசனின் பிக்கப் படத்தில் வனிதாவுக்கு வைரல் ஸ்டார் என்று டைட்டில் கொடுத்திருக்கிறார்கள் போன்று.

இந்நிலையில் பிரியாணி கடை திறப்பு விழாவில் வனிதா விஜயகுமார், பூர்ணா, ஓவியா, ரேஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு வந்த விஜே ஒருவர் வனிதாவை பார்த்து நமஸ்தே என்று கூற அவரோ, என்ன நமஸ்தேனு சொல்ற, டெல்லியில் இருந்தா வந்திருக்க, வணக்கம்னு சொல்லு என்றார்.

பூர்ணாவை பார்த்த அந்த விஜேவோ நான் அவரை பேட்டி எடுக்கலாமா என்று வனிதாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு வனிதாவோ, யாரை வேண்டுமானாலும் பேட்டி எடு, நீ என்ன என் பாய் ஃபிரெண்டா, நீ பிறரிடம் பேசினால் நான் பொறாமைப்பட என்று கடுப்பாகிவிட்டார்.

வனிதா கூறியதை கேட்டு அந்த விஜே சற்று அதிர்ந்தே போய்விட்டார். கெரியரை பொறுத்தவரை கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார் வனிதா. அவ்வப்போது ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad