3ஆம் அலை வந்தாலும் சமாளிக்க ரெடி.. அடித்து சொன்ன மா.சுப்பிரமணியன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

3ஆம் அலை வந்தாலும் சமாளிக்க ரெடி.. அடித்து சொன்ன மா.சுப்பிரமணியன்

3ஆம் அலை வந்தாலும் சமாளிக்க ரெடி.. அடித்து சொன்ன மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை வந்தாலும் அதை சமாளிக்க தமிழகம் தயார்நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மெகா தடுப்பூசி முகாம் தொடர்பான அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஏற்கெனவே முதல் டோஸ் கோவாக்சின் போடப்பட்டவர்களுக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் கோவாக்சின் போடப்படுகிறது. மற்றபடி எல்லோருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் போடப்பட்டு வருகிறது.

கொரோனா மூன்றாம் அலை வரக்கூடாது. எல்லோருக்கும் அதே எண்ணம்தான் உள்ளது. மூன்றாம் அலை வந்தாலும் அதை சமாளிக்க தேவையான எல்லா கட்டமைப்புகளும் முதல்வரின் அதிதீவிர முயற்சியால் தயார்நிலையில் இருக்கிறது.

டெங்கு நோயை பொறுத்தவரை, கொசுக்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து அழிப்பதற்கு கம்பூசியா போன்ற மீன்களை பயன்படுத்துவது, வீடுதோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 13 எல்லையோர கிராமங்கள் இருக்கின்றன. இன்று மீனாட்சிபுரம் சென்றிருந்தோம். கடந்த மாதம் வாளையார் சென்றிருந்தோம். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது, தேவையற்ற தண்ணீர் தேக்கங்களை அகற்றுவத ு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பரவும் ஜிகாவாக இருந்தாலும், இப்போது பரவத் தொடங்கியுள்ள நிபாவாக இருந்தாலும், தமிழகத்துக்கு பாதிப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad