திமுக, அதிமுக எப்படி இருந்ததோ அப்படிதான் இப்போ தேமுதிக இருக்காம்.... சொல்றது யாருன்னு பாருங்க!
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் பூரண குணமாகி வீடு திரும்புவார் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள தனியார் திருமண
மண்டபத்தில் தேமுதிக திருமங்கலம் ஊராட்சி செயலாளர் செல்லதுரை -மீனா திருமணத்தை விஜயபிரபாகரன் நடத்த வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தேமுதிக கட்சி தொய்வாக இருக்கிறது என்பது தவறு. அதிமுக, திமுக கட்சிகள் தோல்வியை தழுவியபோது எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் தான் தேமுதிகவும் உள்ளது. கட்சியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படும்.
தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. கேட்பன் கூறுவது போல ஒரு ஆட்சி அமைந்து 6 மாதங்கள் முடிந்த நிலையில்தான் அந்த ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
கேட்பன் சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை நிறுவனத் தலைவர் கேப்டன் அறிவிப்பார் என்று விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
பேட்டியின்போது திருச்சி வடக்கு மாவட்டத் தலைவர் குமார், தேர்தல் பிரிவு செயலாளர் கொ. தங்கமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணை பழனிசாமி, லால்குடி ஒன்றிய செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment