எம்.பி.,க்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை! - சபாநாயகர் அதிரடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

எம்.பி.,க்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை! - சபாநாயகர் அதிரடி!

எம்.பி.,க்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை! - சபாநாயகர் அதிரடி!

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் ஜீன்ஸ், டி- ஷர்ட் உடை அணிந்து வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பா நாடான பிரிட்டனில், கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க உள்ளது. இந்நிலையில், இனி வரும் நாட்களில், எம்.பி.,க்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட், ஸ்லீவ்லெஸ் அணிந்து பாராளுமன்றத்துக்கு வரக்கூடாது என பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் அதிரடித் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். சபாநாயகரின் இந்த அறிவிப்பு எம்.பி.,க்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் தெரிவித்ததாவது:
நாடாளுமன்றத்துக்கு வரும் எம்.பி.,க்களின் ஆடைகள், அவர்களின் தொகுதி மீது வைத்திருக்கும் மரியாதையை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

ஜீன்ஸ், டி - ஷர்ட், ஸ்போர்ட்ஸ் உடைகள், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போன்ற மாடர்ன் உடைகள் அணிந்து வருவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அனைவரும், தொழில் முறை ஆடைகளையே இனி அணிந்து வர வேண்டும்.

சபாநாயகர் லிண்ட்சேவின் இந்த திடீர் உத்தரவுக்கு ஒரு காரணமும் இருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன்பாக கடந்த 2020ம் ஆண்டு 2020 டிசம்பர் மாதம் கூடிய பிரிட்டன் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு, லேபர் கட்சியைச் சேர்ந்த டிரேசி பிராபின் என்ற ஒரு பெண் எம்.பி., மாடர்ன் உடை அணிந்து வந்தார்.

விவாத நேரத்தின் போது, தோள்பட்டையிலிருந்து அவரது ஆடை விலகியது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் டிரேசி பிராபின் தனது எம்.பி. பதவியையே ராஜினாமா செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, சபாநாயகர் லிண்ட்சே நாடாளுமன்ற ஆடை முறை குறித்து உத்தரவிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad