கொரோனாவால் 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளான நபர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 8, 2021

கொரோனாவால் 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளான நபர்!

கொரோனாவால் 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளான நபர்!

கொரோனா விதிகளை மீறியதற்காகவும், கொரோனா வைரஸை பரப்பியதற்காகவும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் ஜூன் மாதம் முதல் நாட்டில் டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியட்நாமில் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வியட்நாமில் அதிகளவிலான கொரோனா பாதிப்பு ஹோ சி மின் நகரில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில், லீ வான் ட்ரி எனும் 28 வயது இளைஞன் ஹோ சி மின் நகரத்திலிருந்து நாட்டின் தெற்கில் உள்ள தனது சொந்த மாகாணமான கா மவ்வுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

பிற மாகாணங்களிலிருந்து கா மவ்வுக்குள் வரும் எவரும் உடனடியாக 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் லீ வான் ட்ரி, கா மாவில் சுகாதார பணியாளர்களிடம் ஹோ சி மின் நகரில் இருந்து வருவதை மறைத்து விட்டார்.

கட்டுப்பாடுகளை மீறிய ட்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர் சோதனை செய்த சுகாதார மையத்தின் ஊழியர்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad