தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் திறக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் திட்டத்தை ஏற்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்
மனுதாக்கல் செய்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசுகளின் கொள்கை முடிவு என்று கூறி நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மறுத்து வருகின்றன.
நவோதயா பள்ளிகள் தொடங்க மாநில அரசு இடம் வழங்கினால் போதும். அந்த இடத்தில் மத்திய அரசு ரூ.20 கோடியில் நவோதயா பள்ளிகளைத் தொடங்கும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாததால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம்
செலுத்தி, கல்வி கற்கும் நிலை உள்ளது.
எனவே, தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்கவும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment