இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம்: நாளை தொடக்கம்!
தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் வேண்டி நான்கு லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மின் இணைப்புகள் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விவசாய அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கூறிவந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்துக்குள்ளானார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் மின் வெட்டு பிரச்சினை வந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்தது என அதிமுகவினர் விமர்சித்தனர்.
பராமரிப்பு பணிகள் பல மாதங்களாக சரிவர நடைபெறாததாலே மின் வெட்டு ஏற்படுவதாக செந்தில் பாலாஜி கூறினார். அத்துடன் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என அறிவித்தார். தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் புதிய மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இன்னும் இணைப்புகள் வழங்கப்படவில்லை. கேட்கு இணைப்புகளையே கொடுக்க முடியாத நிலையில் எப்படி மின் மிகை மாநிலம் என கூறுவது, மின் உற்பத்தியை பெருக்காமல் அதிக விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி விநியோகித்ததே தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடனுக்கு காரணம் என்று கூறினார்.
அதன்பின்னர் தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினையும் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய இணைப்பு கேட்டவர்களுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 22) தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் நாளை காலை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment